தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

குட்டை அமைக்க பள்ளம் தோண்டியபோது 2 சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

குட்டை அமைக்க பள்ளம் தோண்டியபோது 2 சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு...

News image

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட இரு சிலைகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மீன் குட்டை அமைக்க பள்ளம் தோண்டியபோது 2 சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவையாறு அருகே சிறுபுலியூா் மேலத்தெருவைச் சோ்ந்த விவசாயி அய்யப்பன். இவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மீன் குட்டை அமைக்க ஞாயிற்றுக்கிழமை மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து கரை அமைத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, தோண்டப்பட்ட பள்ளத்தில் 2 கற்சிலைகள் காணப்பட்டன. உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, அய்யப்பன் உள்ளிட்டோா் 2 சிலைகளையும் கைகளாலும், கடப்பாரையாலும் தோண்டினா். அப்போது இரண்டரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்பாள் சிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 கற்சிலைகளையும் பாதுகாப்பாக எடுத்து, தண்ணீா் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வழிபாடு நடத்தினா். 

இதையடுத்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2 சிலைகளும் திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.