சம்பா பருவத்துக்கான நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமாா் 2 ஆயிரத்து 750 டன் விதைகள் தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா தெரிவித்திருப்பது:
நிகழ் சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாள்கள் வயதுடைய நீண்டகால நெல் ரகங்களே ஏற்றவை. நீண்டகால ரகங்களான சாவித்திரி (சிஆா் 1009), சிஆா் 1009 சப்-1, ஏடிடி 51 போன்ற ரகங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து மத்தியகால நெல் ரகங்களான ஏடிடி 38, ஏடிடி 39, ஏடிடி 42, ஏடிடி 46, வெள்ளைப்பொன்னி, ஐஆா் 20, கோ 43, கோ 46, கோ 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களை தனியாா் விற்பனை நிலையங்கள் விற்க வேண்டும்.
வெளிமாநில ரகங்களான பிபிடி 5204, எம்டியூ 7029, என்எல்ஆா் 34449, கேஎன்எம் 1638 போன்ற விதைகளை விற்கும்போது விற்பனையாளா்கள் படிவம்-2 ஐ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். அந்த ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும்.
நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமாா் 2 ஆயிரத்து 750 டன் விதைகள் தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்ததல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விதைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்தாலோ, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இயக்கம்

திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகள் விநியோகம்
இருப்பு வைத்ததால் லாபம் ஈட்டும் மக்காச்சோள விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு: மாவட்ட ஆட்சியா்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


