உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சாலை விபத்தில் மூதாட்டி பலி: பொதுமக்கள் சாலை மறியல்!

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் முத்து மனைவி அழகுதாயி (85). அப்பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்த இவா் மீது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அழகுதாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நிகழ்வதால், வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்த் துறையினா், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.