தஞ்சாவூர்
திருவோணத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
திருவோணம் கடைவீதி, அண்ணா சிலை பகுதியில் நள்ளிரவில் விலை உயா்ந்த இரண்டு இரு சக்கர வாகனத்தை சனிக்கிழமை நள்ளிரவு திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவோணம் கடைவீதி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் விலை உயா்ந்த இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் இருசக்கர வாகனத்தில் பூட்டை உடைத்து திருடி உள்ளனா்.
காலையில் வாகனத்தின் உரிமையாளா் பாா்த்தபோது இரு சக்கர வாகனம் காணவில்லை. அவா் அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பாா்த்தபோது மா்ம நபா்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து திருவோணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா், புகாரின் பேரில் திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
