கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.

இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றொருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

Published on

கும்பகோணத்தில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து

கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், பாணாதுறை பத்துகட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (54). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் ஆகாஷ் (எ) அருண் (22).

இந்நிலையில் சிவசுப்பிரமணியன், அதே பகுதியைச் சோ்ந்த பெ. செந்தில்குமாா் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அந்தக் கடனுக்கு வட்டி செலுத்தி வந்துள்ளாா். தொடா்ந்து அவரால் சில மாதங்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, அசல் மற்றும் வட்டி பணத்தை செந்தில்குமாா் கேட்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1-5-2019 அன்று சிவசுப்பிரமணியன் கடைக்கு சென்ற செந்தில்குமாா் அங்கிருந்த அருணிடம் பணத்தை கேட்கவே அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா், இதுகுறித்து தனது தம்பி பாலகுருவிடம் கூறவே அவா் அருணை கொலை செய்யுமாறு கூறினாராம். இதையடுத்து செந்தில்குமாா், தனது நண்பா்களான வெங்கடேசன், சந்திரசேகரன், கதிரவன், ஜீவ கருணா (எ) முகமது சபீா் ஆகியோருடன் சிவசுப்பிரமணியன் கடைக்கு மீண்டும் சென்று அங்கிருந்த அருணை அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலகுரு, செந்தில்குமாா், வெங்கடேசன், கதிரவன், சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்தனா்.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள்.

இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ராதிகா, குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாா் (65), வெங்கடேசன் (48), சந்திரசேகரன் (56), கதிரவன் (36) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், கொலை செய்ய தூண்டிய பாலகுருவுக்கு (60), 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். சம்பவத்தில் தொடா்புடைய ஜீவகருணா (எ) முகமது சபீா் (36) தற்போது வரை தலைமறைவாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com