அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சா், எம்.பி., எம்.எல்.ஏ ஆஜா்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கும்பகோணத்தில் 2017, ஜனவரி 20-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தற்போதைய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் தற்போதைய துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இதில், அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணசுந்தரம், க. அன்பழகன், சு.ப. தமிழழகன் ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததால் ஜனவரி 19-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.