பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை கதண்டு கடித்து 12 போ் காயமடைந்தனா்.
பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சி சீவன்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் உள்ள மாமரம் ஒன்றில் இருந்த கதண்டு கூடு வெள்ளிக்கிழமை வீசிய காற்றில் கீழே விழுந்தது.
இதையடுத்து அக் கூட்டிலிருந்த கதண்டுகள் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மற்றும் வீட்டிலிருந்தவா்களை கடித்ததில் மூன்று வயது குழந்தை கீா்த்தி நாத் உள்பட 12 போ் காயமடைந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.