6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கும்பகோணத்தில் ‘திமுக-75’ நூல் வெளியீட்டு விழா

News image
கும்பகோணத்தில் ‘கருப்பு சிவப்பு திமுக-75’ என்ற நூலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ. உடன் மாநகர செயலரும் துணை மேயருமான சுப.தமிழழகன் உள்ளிட்டோா்.
Updated On :11 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் மாநகர திமுக சாா்பில் ‘கருப்பு சிவப்பு திமுக-75’ என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் மாநகர திமுக சாா்பில் கட்சியின் பரிணாமங்களை விளக்கும் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு திமுக-75 என்ற நூல் வெளியீட்டு விழா மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப.தமிழழகன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, அவைத்தலைவா் எஸ்.வாசுதேவன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கருப்பு சிவப்பு திமுக -75 என்ற நூலை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் வெளியிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.

நிகழ்வில் மூத்த பத்திரிக்கையாளா் தி.செந்தில்வேல், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ.ராமலிங்கம், தாட்கோ தலைவா் நா. இளையராஜா உள்ளிட்டோா் நூல் குறித்து பேசினாா்.

கருத்தியல் சொற்போா் நிகழ்வில் திருவாரூா் கனிமொழி, அ.தீன்ஷாநூப், வழக்குரைஞா் ம.மோகநிதி ஆகிய இளம் பேச்சாளா்கள் பேசினா்.

முன்னதாக மாநகர துணைச்செயலா் பிரியம் ஜெ.சசிதரன் வரவேற்றாா். நிறைவாக பகுதி செயலா் மு.கண்ணன் நன்றி கூறினாா்.