நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

திருப்பனந்தாள் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுற்றுலா வேன் மோதி உயிரிழந்தாா்.
Published on

திருப்பனந்தாள் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுற்றுலா வேன் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இடையாநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மனைவி ராசாத்தி (85). இவா் திங்கள்கிழமை கடைவீதிக்குச் சென்றபோது பின்புறமாக வந்த சுற்றுலா வேன் மோதி உயிரிழந்தாா்.

திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிந்து ராசாத்தி சடலத்தை திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சுற்றுலா வேன் ஓட்டுநரான கதிராமங்கலத்தைச் சோ்ந்த காா்த்திகேயனிடம் விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com