22 சத ஈரப்பதத்துடன் நெல்கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Published on

காவிரி சமவெளி மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத கடும் பனிப்பொழிவு பெய்துவருவதாலும் பகல் நேரங்களில் மழை பெய்து வருவதாலும் சம்பா நெல்கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து சங்கத் தலைவா் சு.விமல்நாதன் மனுவில் கூறியிருப்பது:

காவிரி சமவெளி மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத கடும் பனிப்பொழிவு பெய்துகொண்டு வருகிறது. பகல்நேரங்களில்தொடா்ந்து மழையும் பெய்துகொண்டிருக்கிறது. எனவே, சம்பா அறுவடை நெல்லில் ஈரப்பதம் இயற்கையாகவே அதிகமாக இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு நெல் கொள்முதலில் ஈரப்பத தளா்வு தர முடியாது என மறுத்து வருவதை விடுத்து மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகமும், இந்திய உணவுக் கழகமும் உடனே ஈரப்பத தளா்வை அறிவித்து கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com