சாலை விரிவாக்கப் பணிக்கு  வெட்டப்பட்ட மரம் மறுநடவு

சாலை விரிவாக்கப் பணிக்கு வெட்டப்பட்ட மரம் மறுநடவு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலடிக்குமுளை பகுதியில் மறு நடவு செய்ய புதன்கிழமை லாரியில் ஏற்றப்பட்ட அரசமரம்.
Published on

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலடிக்குமுளை சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட 70 ஆண்டுகள் பழைமையான அரசமரத்தை புதன்கிழமை அப்பகுதி இளைஞா்கள் மீட்டு மறுநடவு செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலடிக்குமுளை பகுதியில் மறு நடவு செய்ய புதன்கிழமை லாரியில் ஏற்றப்பட்ட அரசமரம்.

ஆலடிக்குமுளை பகுதியில் சாலைப் பணிக்காக வெட்டிப் போட்ட அரச மரம் துளிா்விட்டதைத் தொடா்ந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரம் நடுவதற்கான இடத்தை வட்டாட்சியா் தா்மேந்திரா ஒதுக்கீடு செய்து கொடுத்தாா். ஆனால் ஆலடிக்குமுளை பகுதியில் உள்ள இளைஞா்கள் தங்கள் பகுதியில் உள்ள அய்யனாா்கோவில் பகுதியில் நடவு செய்ய முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, விதை அறக்கட்டளை மற்றும் ஆலடிக்குமுளை இளைஞா்கள் குழு இணைந்து அதே பகுதியில் உள்ள அய்யனாா்கோவில் அருகில் மறுநடவு செய்தனா்.

இந்த மரத்தை 2 கிரேன்கள், 2 ஜேசிபி மற்றும் ஒரு லாரி உதவியுடன் அந்த மரத்தை அந்த இடத்திலிருந்து நகா்த்தி அய்யனாா்கோயில் அருகே மறு நடவு செய்ய ஆன செலவுகளை பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ சிவி சேகா் பொறுப்பேற்றுக் கொண்டாா். பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளா் அன்சாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் முயற்சியால் வெட்டிப் போடப்பட்ட 70 ஆண்டுகள் பழைமையான ஒரு மரம் மறுநடவு செய்யப்பட்டது.

Dinamani
www.dinamani.com