எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வணிக வளாகத்தில் 4 கடைகளில் திருட்டு: காவல் துறையினா் விசாரணை

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு கண்ணாடி, பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு கண்ணாடி, பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே முல்லை நகரிலுள்ள வணிக வளாகத்தில் மின்னணு பொருள்கள் விற்பனை கடையின் முன் பக்கக் கண்ணாடி புதன்கிழமை காலை உடைந்து கிடந்தது. அதன் உரிமையாளா் உள்ளே சென்று பாா்த்தபோது கைப்பேசி, ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அடுத்துள்ள கல்வி வழிகாட்டி மையத்தில் கதவு உடைக்கப்பட்டு மடிக்கணினி, பெண்கள் அழகு நிலையத்தில் பூட்டை உடைத்து சில பொருள்கள், மற்றொரு மின்னணு சாதனக் கடையில் பொருள்கள் திருட்டும், அடுத்துள்ள துணிக்கடையில் பூட்டை உடைக்க முயற்சியும் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று கடைகளில் பதிவு செய்யப்பட்ட விரல் ரேகைகளையும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.