கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

News image
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய நகா் மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் சி. நாகராஜன்.
Updated On :23 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தேவி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரஞ்சன் கோபால் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு திருவையாறு நகா்மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் சி. நாகராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் சந்துரு, ராஜ்குமாா், தாமோதரன், செல்வம் ஆகியோா் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

முன்னதாக, பள்ளி உதவித் தலைமையாசிரியா் ஆல்பா்ட் வரவேற்றாா். நிறைவாக, உதவித் தலைமையாசிரியா் சங்கா் நன்றி கூறினாா்.