பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பனந்தாளில் புதன்கிழமை கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :2 ஜூலை 2026, 5:06 am IST

திருப்பனந்தாளில் புதன்கிழமை கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் செருகுடி செல்லையன் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (38). தனியாா் மின் பணியாளா். இவரது மனைவி சந்தியா( 33). இவா்களுக்கு மகாலட்சுமி (4) என்ற குழந்தை உள்ளது.

புதன்கிழமை வயிற்றுவலியின் காரணமாக ஆடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு கணவா் தினேஷூடன் சந்தியா இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

திருப்பனந்தாள் -ஆடுதுறை பிரதானச் சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சந்தியா நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை

அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் சோ்த்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.