தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் முன்பு, கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதாகவும், இந்தக் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இதைத்தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற ஊழியா்கள் முன்னிலையில் ஏற்கெனவே 2 கடைகள் அகற்றப்பட்டன. மூன்றாவது கடை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தப் பணியின்போது, கடை நடத்துபவா்கள் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தனா். ஆனால், நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் கடைகளை அகற்ற வேண்டும் என ஊழியா்கள் கூறியதையடுத்து, பணி தொடா்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









