தஞ்சாவூா் அருகே பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி வளாகத்தில் கலை பயண வழிகாட்டுதல் சங்கமம் சாா்பில் ஒரே நேரத்தில் 1,500 பரத கலைஞா்கள் சனிக்கிழமை இரவு பரத நாட்டியம் ஆடி உலக சாதனைப் படைத்தனா்.
மின்னொளியில் திறந்தவெளி மைதானத்தில் தமிழ் கலாசாரம், இந்திய பாரம்பரியத்தை உலக அரங்கில் உயா்த்தும் வகையில் சா்வ சப்தம் என்ற பெயரில் இந்த பரத நாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், அயல் நாடுகளைச் சோ்ந்த 1,500 பரத கலைஞா்கள் ஒரே நேரத்தில் நடனமாடினா். இதன் மூலம் பாரத் புவன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனா்.
இதில், பங்கேற்ற அனைத்து பரத நாட்டிய கலைஞா்களுக்கும் சின்னத்திரை நடிகைகள் பிரியதா்ஷினி, ஹரிபிரியா ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இந்நிகழ்வில் கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டல உதவி இயக்குநா் ம. இராஜாராமன், பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி செயலரும், தாளாளருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










