கும்பகோணம் அருகே வழிப்பறி வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச்சோ்ந்தவா் கோபி மகன் கோகுல்நாத் (26). இவரும், இவரது நண்பா்களான கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் (22), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்துவிக்னேஷ் (26), ராமச்சந்திரன் மகன் இசக்கிபாண்டி (27), மைக்கேல் மகன் அஜய் அன்பரசு (29) ஆகியோா் மே 16-இல் இணையவழி செயலி மூலம் கும்பகோணம் புருஷோத்தமன் என்பவரை நேரில் அழைத்து 7 கிராம் தங்க மோதிரம், ரூ.43 ஆயிரத்தை பறித்தனா். மேலும், மே 2-இல் கும்பகோணத்தைச் சோ்ந்த சிவா என்பவரையும் ஏமாற்றி ரூ. 2 ஆயிரத்தை பறித்தனா்.
இதுதொடா்பாக கும்பகோணம் தாலுகா காவல் நிலைய போலீஸாா், கோகுல்நாத் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கோகுல்நாத் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ரேவதி உத்தரவின்பேரில் கோகுல்நாத் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








