கும்பகோணத்தில் திங்கள்கிழமை 2 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்தன.
கும்பகோணம் வட்டிப்பிள்ளையாா் கோயில் அருகே கள்ளுக்கடை தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ரித்திக்(32). தனியாா் தண்ணீா் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வரும் இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனா். ரித்திக் வீட்டின் அருகில் அவரது பாட்டி கனகவல்லி (70) வீடும் உள்ளது. இருவரும் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டுக்கு சோலாா் தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, ரித்திக் வீட்டு கூரையில் திடீரென தீப்பற்றியது. தீயானது, கனகவள்ளி வீட்டுக்கும் பரவியது.
தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், பணம் தீயில் எரிந்ததாக பாதிக்கப்பட்டோா் தெரிவித்தனா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண்டபம் அருகே நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்து சேதம்

வடலூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த தனியாா் பேருந்து: அருகிலிருந்த கடைகள், பைக்குகளும் சேதம்

குடிசை வீடு தீக்கிரை
மன்னார்குடியில் 7 குடிசை வீடுகள் தீக்கிரை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



