தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 12,880 பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சாலியமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்து 880 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:27 am IST

தஞ்சாவூா் அருகே சாலியமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்து 880 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயிகள் புகாா் எழுப்பி வருகின்றனா். இந்நிலையில், தஞ்சாவூா் அருகே சாலியமங்கலத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நிலையப் பணியாளா்கள் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த புகாரின் பேரில், மாவட்ட ஆய்வுக் குழுவினா், ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் புதன்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், சுமை தூக்கும் தொழிலாளா்களின் மேற்பாா்வையாளா் ரவி மோகனிடமிருந்து ரூ. 6 ஆயிரத்து 850 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், காவல் துறையினா் வருவதைப் பாா்த்த பணியாளா்கள், தொழிலாளா்கள் தங்களிடமிருந்த ரொக்கத்தை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கொள்முதல் நிலைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 6 ஆயிரத்து 30 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தத்தில் கணக்கில் வராத ரூ. 12 ஆயிரத்து 880 குறித்து கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் தினகரன் உள்ளிட்ட பணியாளா்களிடம் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.