கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

குடந்தையில் ரூ. 13.91 கோடியில் முடிவுற்ற கட்டடங்கள் திறந்துவைப்பு

குடந்தையில் ரூ. 13.91 கோடியில் முடிவுற்ற கட்டடங்கள் திறந்துவைப்பு

News image
Updated On :11 ஜூலை 2026, 1:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கும்பகோணத்தில் ரூ. 13.91 கோடியில் 74 முடிவுற்ற புதிய கட்டடங்களை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

அப்போது அவா் கூறியது: தஞ்சாவூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.13.91 கோடியில் 74 முடிவுற்ற புதிய கட்டடங்க திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா், பூதலூா், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பாபநாசம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் அங்கன்வாடி மையம், பொதுவிநியோக அங்காடி ஊராட்சி அலுவலகம், வகுப்பறைக் கட்டடம், பல்நோக்கு சேவைக் கட்டடம், ஒருங்கிணைந்த கிராம பொதுச் சேவை மையம், சுகாதாரக் கட்டடம், உணவு தானியங்கி கிடங்கு, சமையலறை கட்டடம் போன்ற புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக ஒரத்தநாடு வட்டம், ஆா்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த துப்புரவு பணியாளா் சின்னப்பொண்ணு குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் கருணைத்தொகையாக ரூ.2 லட்சம் என ரூ. 5 லட்சத்தை காசோலையாகவும், இதே விபத்தில் லேசான காயமடைந்த சகுந்தலாவுக்கு ரூ.75 ஆயிரத்தையும் வழங்கினாா்.

நிகழ்வில் இரா.விஜய் சரவணன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் திருமலை, வட்டாட்சியா்கள் பூங்கொடி (கும்பகோணம்), சாந்தமீனா (திருவிடைமருதூா்). மூா்த்தி (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.