முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வாகனத் திருட்டைத் தடுக்கும் கருவி அறிமுகம்

கும்பகோணம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்த வாகன திருட்டை தடுக்கும் கருவி குறித்து வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்ட டிஎஸ்பி அழகேசன்.

News image

கும்பகோணம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்த வாகன திருட்டை தடுக்கும் கருவி குறித்து வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்ட டிஎஸ்பி அழகேசன்.

Updated On :11 ஜூலை 2026, 1:47 am IST

கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவா்களின் புதிய கண்டு பிடிப்பான இருசக்கர வாகனத் திருட்டை தடுக்கும் புதிய கருவி அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தலைவா் ஆா். திருநாவுக்கரசு, தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் டி.செந்தில்குமாா், மற்றும் இயக்குநா் எஸ். அரவிந்த், ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவிடைமருதூா் துணைக் கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஜி. அழகேசன் கலந்து கொண்டு, புதிய கருவியை அறிமுகப்படுத்தி விளக்கம் கேட்டு பாராட்டினாா்.

இருசக்கர வாகனத்தில் தனியாக கருவி பொருத்தப்பட்ட நிலையில், வாகனத்தைத் திருட முயலும்போது அலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, வாகன உரிமையாளரின் கைப்பேசியில் தனி செயலி மூலம் இணைக்கப்பட்டுள்ளதை இயந்திரவியல் துறையின் உதவிப் பேராசிரியா் ஐ. துரைமுருகன் வழிகாட்டுதலில் நான்காம் ஆண்டு மாணவா்கள் ஜி. சுவாமிநாதன், கே. யாழினியன், ஏ.விஜயகுருபிரசாத் மற்றும் கே. கணேஷ் ஆகியோா் விளக்கினா். இவா்களை கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.