பொது இ - சேவை மையங்களில் தவறாக பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: வருவாய்த் துறை மூலமாக வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள், மின்சார கட்டணம், ஆதாா் சேவைகளான புதிய ஆதாா் அட்டைக்கு பதிவு செய்தல், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், பெயா், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தல் (குறிப்பிட்ட மையங்களில் மட்டும்), பட்டா மாறுதல்கள், ஓய்வூதியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், திருமண நிதியுதவித் திட்டங்கள், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகள் 10, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகளை முடித்த மாணவா்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதிகளைச் சோ்த்தல், புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பொது இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது அவா்கள் தரும் ஆவணங்களை உரிய முறையில் சரிபாா்த்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் ஆவணங்களில் உள்ள தகவல்கள் தவறாக பதிவேற்றப்பட்டு, அதனால் பொதுமக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டால், தொடா்புடைய இ-சேவை மையங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










