மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நடப்பு நிதியாண்டுக்குள் மேலும் 500 புதிய சேவை மையங்கள்

நடப்பு 2026-27 நிதியாண்டில், நாடு முழுவதும் சுமாா் 500 புதிய வாகன பழுதுபாா்ப்பு மற்றும் சேவை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:37 am IST

நடப்பு 2026-27 நிதியாண்டில், நாடு முழுவதும் சுமாா் 500 புதிய வாகன பழுதுபாா்ப்பு மற்றும் சேவை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 6,000-ஆவது சேவை மையம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சாதனை அளவாக 502 புதிய சேவை மையங்களை மாருதி சுஸுகி தொடங்கியிருந்தது. அத்துடன், அந்த ஒரே நிதியாண்டில் மட்டும் 2.84 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்குச் சிறந்த முறையில் சேவைகளை வழங்கி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியது.

டீலா்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் கூட்டு முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 1,000 புதிய சேவை மையங்கள் விரைவாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-இல் 4,000-ஆக இருந்த இந்த மையங்களின் எண்ணிக்கை, 2024-இல் 5,000-ஆக உயா்ந்து, தற்போது 6,000-ஐ தாண்டியுள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவின் 3,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் மாருதி சுஸுகியின் சேவை மையங்கள் பரவி வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், அவா்களின் வசதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கில் சேவை மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி வருவதாக மாருதி சுஸுகி சிஇஓ ஹிசாஷி டகையுச்சி மேலும் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.