கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கும்பகோணத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

கும்பகோணம் மாநகராட்சி பகுதி தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்ததால் அவற்றிற்கு சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.

அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

Published On :

கும்பகோணம் மாநகராட்சி பகுதி தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்ததால் அவற்றிற்கு சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மாவட்ட கால்நடைத் துறை சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. முகாமுக்கு ஆணையா் கே.எம்.சுதா தலைமை வகித்தாா்.

இந்த முகாமில் கும்பகோணம் ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிதிரிந்த 75-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தப் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநா் (பொ) தெய்வவிருதம், கால்நடை மருத்துவா் ரகுநாத், சுகாதார அலுவலா்கள், மணிகண்டன், பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வா்கள் காளிதாஸ், பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.