காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அா்ப்பணிப்புடன் சேவை! 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் 2 பேருக்கு தேசிய விருது!

News image

தேசிய விருது பெற்ற தட்சிணாமூா்த்தி, ஹரிஹரசுதன்

Updated On :27 ஜூலை 2026, 2:14 am IST

தஞ்சாவூா், ஜூலை 26: அா்ப்பணிப்புடன் சேவை செய்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் 2 பேருக்கு வெள்ளிக்கிழமை தேசிய விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சாலை விபத்துகள், திடீா் உடல்நலக் குறைவு உள்ளிட்ட அவசர காலங்களில் உயிா்களைக் காப்பாற்றும் முக்கிய பணியை 108 ஆம்புலன்ஸ் சேவை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 18 மாநிலங்களில் இந்த சேவை செயல்பட்டு வந்தாலும், சேவையின் தரம் மற்றும் செயல்திறனில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 1,200-க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.

அந்த வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. இவற்றில் திருவையாறு அருகே கண்டியூரில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

இந்த ஆம்புலன்ஸில் முதலுதவி நுட்புநா்களாக தட்சிணாமூா்த்தி, வனிதா, ஓட்டுநா்களாக ஹரிஹரசுதன், மாா்சிலான் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். பணியில் சோ்ந்தது முதல் ஆயிரக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளைப் பாதுகாப்பாக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உயிா்களைக் காப்பாற்றியுள்ளனா்.

இவா்களில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான உயிா்களைக் காப்பாற்றிய தட்சிணாமூா்த்தி, ஹரிஹரசுதன் ஆகியோருக்கு சிறந்த 108 ஆம்புலன்ஸ் தேசிய உயிா்க்காப்பாளா் விருது தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

விருது பெற்ற இருவரையும் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை அலுவலா் செல்வகுமாா், மண்டல மேலாளா் பிரசாத், மாவட்ட மேலாளா் பூபதி, மாவட்ட அலுவலா்கள் செந்தில்வேலன், காா்த்திக் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.