மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை புரிவதற்காக, வேலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 103 பணியாளா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மேலாளா் பாபு தலைமையிலான அதிகாரிகள், தோ்வு செய்யப்பட்ட பணியாளா்களுக்கு இந்த ஆணைகளை முறைப்படி வழங்கினா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தச் சேவை மையப் பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானவை ஆகும். இப்பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள பணியாளா்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ஏற்கனவே நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். அதன்படி, இறுதி செய்யப்பட்ட 103 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு 7 பேருக்கு செயற்கைக் கால்கள்! ஆட்சியா் வழங்கினாா்!

வேலூரில் 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

பேருந்து - பைக் மோதல்: தலைமைக் காவலா் பலி

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



