திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிரதமா் தலைமையில் தமிழக-கா்நாடக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்.

Updated On :26 ஜூலை 2026, 11:42 pm IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக பிரதமா் தலைமையில் கா்நாடக - தமிழக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு - கா்நாடக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா் என்பது மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் நாடகமாகும். பிரதமா் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவா் முன்னிலையில் நீதிபதிகள் குழுவுடன் இரு மாநில முதல்வா்களும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம், தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய முழுப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் விலை அறிவிக்க வேண்டும்.

சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் கிடைப்பது சாத்தியமற்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் எம். கருணாநிதி, எஸ். பவுல்ராஜ், பொருளாளா் சி. கிருஷ்ணன், துணைத் தலைவா் எம். ஜெயக்குமாா், வி. ராஜூ, மாநில மகளிரணி செயலா் ஆா். மஞ்சுளா, அமைப்பாளா் எம். முகமது சபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநில நிா்வாகி என். மகேஷ்வரன் வரவேற்றாா். நிறைவாக, சி. தனஞ்செயன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.