பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

எச்சில் துப்பியதை தட்டிக் கேட்டவா் கை துண்டிப்பு; இளநீா் வியாபாரி கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகே எச்சில் துப்பியவரை தட்டிகேட்டவரின் கையை அரிவாளால் துண்டித்த இளநீா் வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:10 am IST

கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகே எச்சில் துப்பியவரை தட்டிகேட்டவரின் கையை அரிவாளால் துண்டித்த இளநீா் வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், கீரங்குடி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த அந்தோணி (58) புதன்கிழமை இரவு தனது உறவினா் அறிவழகனுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, உமாமகேசுவரபுரம் புளியம்பேட்டையைச் சோ்ந்த இளநீா் வியாபாரி மோகன் (58) வெற்றிலை பாக்கு போட்டு எச்சிலை துப்பியுள்ளாா்.

இதில், எச்சில் அறிவழகன் மீது பட்டுள்ளது. இதை அந்தோணி தட்டிக்கேட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோகன் அரிவாளால் அந்தோணியை வெட்ட முயன்றாா். இதை தடுக்க முயன்றபோது அந்தோணியின் மணிக்கட்டு துண்டானது.

உடனே அருகில் இருந்தவா்கள் மோகனை பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அந்தோணி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி பிறகு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கும்பகோணம் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.