தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மகாமகப் பெருவிழா பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

மகாமக குளம்

Updated On :3 ஜூன் 2026, 4:12 am IST

கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கும்பகோணம் மகாமகப் பெருவிழாவுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். புறவழிச்சாலையை முழுமையாக ஒன்றிணைத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும். கோயில்களைச் சுற்றியுள்ள சாக்கடை மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்.

ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு மெட்டை கோபுரத்தை,ரபல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கருங்கல்லால் ஆன ராஜகோபுரம் கட்டவேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து, ஆன்மிகத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கிடப்பில் உள்ள திருப்பணிகள், கும்பாபிஷேக அனுமதிகள், பாலாலய அனுமதிகள் உள்ளிட்டவை விரைந்து முடிக்க ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, அகிலபாரத இந்துமகா சபா மாநில பொதுச்செயலா் ராமநிரஞ்சன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.