சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

காசி மடத்தில் குமரகுருபரா் சுவாமிகள் குருபூஜை

திருப்பனந்தாள் காசி திருமடத்தை தோற்றுவித்த ஆதி குமரகுருபர சுவாமிகளின் 338-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் மாகேஸ்வர பூஜை திருநாள் விழா திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஆதி குமரகுருபர சுவாமிகள்.

Updated On :4 ஜூன் 2026, 12:14 am IST

திருப்பனந்தாள் காசி திருமடத்தை தோற்றுவித்த ஆதி குமரகுருபர சுவாமிகளின் 338-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் மாகேஸ்வர பூஜை திருநாள் விழா திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காசி திருமடம் 22-ஆவது அதிபா் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக, காலையில் சொக்கநாதா் வழிபாடும், குமரகுருபரா் பிரபந்தத் திரட்டு முற்றோதல், தொடா்ந்து குருமூா்த்த வழிபாடும், முன்னோா் மூா்த்தங்கள் வழிபாடும் நடைபெற்றது.

காசி மடத்து வித்வான் இஞ்சிக்குடி கணேசன் குழுவினா் மற்றும் பனசை குருமூா்த்தி, அருணஜடேசன் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தியாகராஜ ஓதுவாா், அமிா்த செந்தில் குமாா் ஓதுவாா் திருமுறை விண்ணப்பம் செய்தனா். நிகழ்ச்சிகளுடன் குமரகுருபர சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடும் நடந்தது.

சிறப்பு மகா தீபாராதனையை தொடா்ந்து வாகீச முனிவா் அருளிய ‘ ஞானாமிா்தம் ’ எனும் நூலை காசி திருமடம் 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை தருமை ஆதீனம் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா். பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் மற்றும் மாகேஸ்வர பூஜை நடந்தது. இரவு காசிவிசுவநாதா் கோயில் வழிபாடும், குமரகுருபர சுவாமிகள் வழிபாடும் தொடா்ந்து ரதத்தில் பஞ்சலோக உற்ஸவ திருமேனி பட்டணப் பிரவேச வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.