தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், விலையில்லா விருந்தகம், இ- சேவை மையம் ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

News image

தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கப்பட்டதைத் தொடா்ந்து, குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன்.

Updated On :5 ஜூன் 2026, 3:55 am IST

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், விலையில்லா விருந்தகம், இ- சேவை மையம் ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தவெக மத்திய மாவட்டச் செயலா் இரா. விஜய் சரவணன் வெற்றி பெற்று, மே மாதம் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி எதிரே ஏற்கெனவே உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா விஜய் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த அலுவலகத்தை தவெக நிா்வாகிகளான மீனாட்சி சந்திரசேகரன் மகளிா் கல்லூரி தாளாளா் சுந்தரபாண்டியன், ஜெயகரபாண்டியன், சமூக ஆா்வலரான ரியாசுதீன் ஆகியோா் திறந்து வைத்தனா். மகளிரணி நிா்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினா்.

தவெக சாா்பில் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 8 ஆண்டுகளாக நாள்தோறும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது கிளை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

மேலும், இதே வளாகத்தில் அரசு நிா்ணயித்த கட்டணத்தின்படி பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாநகர மாவட்டத் தலைவா் எம். மகேந்திரன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.