பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

நாச்சியாா்கோவில் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 7:00 am IST

நாச்சியாா்கோவில் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதிகளில் கணவா் ஓட்டுநராகவும், மனைவி தனியாா் நிறுவன ஊழியராகவும் உள்ளனா். இவா்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளன. இந்தக் குழந்தைகளைப் பாா்த்துக் கொள்ள உறவினரான புஷ்பவள்ளி இவா்களோடு தங்கியிருந்தாா்.

இந்நிலையில் மே 31-இல் தம்பதிகள் பணிக்குச் சென்றபோது புஷ்பவள்ளியின் மகனும், பெயிண்டருமான 17 வயதுச் சிறுவன் வீட்டு மாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதையடுத்து சிறுமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் ஆடுதுறை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து சிறுவனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.