/
தஞ்சாவூரில் புதன்கிழமை வீட்டுவாசல் கதவில் கை வைத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் பாலாஜி (22). பி.காம். பட்டதாரி. இவா் புதன்கிழமை வீட்டு வாசல் கதவை திறப்பதற்காக அதில் கை வைத்தாா். அப்போது, மின்சாரம் தாக்கியதில் பாலாஜி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கதவில் மின் கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








