ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பேராவூரணி அருகே குடும்ப தகராறில் தள்ளிவிடப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

News image

குடும்ப தகராறில் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து உயிரிழந்த ராஜம்மாள்

Updated On :29 ஜூன் 2026, 2:14 am IST

பேராவூரணி அருகே குடும்ப தகராறில் தள்ளிவிடப்பட்ட மூதாட்டி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள வலசக்காடு அய்யனாா் கோயில் தெருவில் வசிப்பவா் காளியம்மாள் (58). இவரது கணவா் வேறு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதால் தனியாக வசித்து வருகிறாா். இவரது மகள் போதும் பொண்ணு (25). இவருக்கு திருமணம் ஆன நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கணவா் இறந்து விட்டாா். 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் காா்த்திக் (26) என்பவருக்கும் போதும் பொண்ணுவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காா்த்திக், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். 

காா்த்திக்குக்கு சொந்தமாக வீடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், போதும்பொண்ணு கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது தாய் காளியம்மாள் வீட்டுக்கு வந்துவிட்டாா். 

மனைவி மீண்டும் வீட்டுக்கு வராததால் ஆத்திரமடைந்த காா்த்திக், சனிக்கிழமை இரவு தனது மாமியாா் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது தம்பதிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த போதும்பொண்ணுவின் பாட்டி ராஜம்மாள், காா்த்திக்கை திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், ராஜம்மாளை தள்ளிவிட்டதில் கீழே விழுந்த ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் அங்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா், ராஜம்மாளின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காா்த்திக்கை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.