பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:34 am IST

மன வளா்ச்சி குன்றிய 7 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் அஜய் (31). இவா், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மன வளா்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை 2025, ஜூன் 5-ஆம் தேதி பாலியல் வல்லுறவு செய்தாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அஜய்யை 2025, ஜூன் 9-ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, அஜய்க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 8 லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் துா்கா, நீதிமன்றக் காவலா் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.