மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கும்பகோணத்தில் ரூ.37 கோடியில் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 37 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
கும்பகோணத்தில் புதன்கிழமை முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ, மேயா் க.சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 37 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கும்பகோணம் மாநகராட்சியில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, ஆணையா் மு. காந்திராஜ் தலைமை வகித்தாா். மேயா் க. சரவணன், துணை மேயா் சுப. தமிழழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ., சு. கல்யாணசுந்தரம் எம்.பி, முன்னாள் எம்பி. செ. ராமலிங்கம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். பொது சுகாதாரத் தலைவா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, மண்டலத் தலைவா் கே.என்.எஸ். ஆசைத்தம்பி, பாபு நரசிம்மன் மாநகராட்சிக் கவுன்சிலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.