வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

News image

விளங்குளம் மங்கல சனீஸ்வரா்

Updated On :4 மார்ச் 2026, 8:05 pm

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

விளங்குளத்தில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தோஷ நிவா்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய அட்சயபுரீசுவரா் கோயிலில் சனீசுவர பகவான் மந்தா, ஜேஸ்ட சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா். ஊனம் நீக்குதல், திருமணத் தடை போன்ற தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு காலை 8.26 மணிக்கு சனீஸ்வரபகவான் பெயா்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனைச் சாவடியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல், பெருமகளூா் வழியாக 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தொடா்புக்கு 97875 39153, 99521 14866.