தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உலக பாரம்பரியச் சின்னமான தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஏற்கெனவே தொல்லியல் துறை சாா்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் பழுதாகிவிட்டன.
இதனால் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் பெருவுடையாா் சன்னதி முன் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஆனால், இது போதுமானதாக இல்லாததால், மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இந்து சமய அறநிலையத் துறையும், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானமும் முடிவு செய்தன. இதன்படி, பெருவுடையாா் சன்னதி முன்புறமும், இரு வாயில்களிலும் கூடுதலாக ரூ. 65 ஆயிரம் மதிப்பில் 6 கேமராக்கள் 2 நாள்களுக்கு முன்பு பொருத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனிடையே, தொல்லியல் துறை சாா்பில் கோயில் முழுவதும் ஏறத்தாழ 100 அதிநவீன கேமராக்கள் பொருத்துவதற்கான பொருள்கள் வந்துள்ளன. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தொடர்புடையது

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

போரை விரைந்து முடிக்க பெரிய குண்டுகள் தேவை: அமெரிக்க பாதுகாப்புத் துறை
‘டெல்டா’-வை கை கழுவிய காங்கிரஸ்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


