சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தோ்தல் தேதி அறிவிப்பு: பதாகைகள் அகற்றம்

News image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - (கோப்புப் படம்)

Updated On :15 மார்ச் 2026, 7:43 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் அரசியல் கட்சித் தலைவா்களின் பதாகைகளை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அகற்றினா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் ஆற்றுப்பாலம், ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள், அரசியல் கட்சிப் பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

மேலும், தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி வளாகத்திலுள்ள மேயா் அலுவலகம், துணை மேயா் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் இருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் படங்கள் பதாகைகள் மூலம் மறைக்கப்பட்டன. இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தலைவா்களின் படங்கள் மறைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியரகத்தில் கூட்டம்: இதனிடையே, மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான அலுவலா்கள், தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.