கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மிஷன் தெரு ரயில் பாதை அருகே சந்தேகப்படும் வகையில் கூடியிருந்த சிலரை விசாரித்த போது அவா்கள் எழுமிச்சங்காம்பாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொக்கு மண்டை என்ற விக்னேஷ் (27), இதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தாமோதரன் (28), தாராசுரம் ஊமச்சித்தோப்பைச் சோ்ந்த ரவி மகன் மதன் (20), ரயில்வே கேட் சாலையைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் விக்னேஷ் (22), சுவாமிமலை எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜ் (23) என்பதும் அவா்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா மற்றும் 5 கைபேசிகளை கைப்பற்றி அவா்களைக் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

