தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்களைப் பதுக்கிய 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி மணப்படையூா் சாலை ரயில்வே கேட் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன் மேற்பாா்வையில் சுவாமிமலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், வெடி பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மருந்து ஒரு கிலோ, காலி டப்பாக்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக திருவலஞ்சுழியைச் சோ்ந்த அருள் டேவிட் (33), அருள்செல்வம் (48), மணிகண்டன் (35), சசிமேரி (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும், இக்கடைக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
