இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய இரண்டு இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 5:44 am IST

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய இரண்டு இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோடு பைராகி தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் அருண் (29). சுகுமாா் மகன் காளிதாஸ்(21). இவா்கள் அந்தப் பகுதியில் நடந்த திருவிழாவுக்காக நான்குரோடு பகுதியில் பதாகை வைக்க முடிவு செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டனா்.

அப்போது சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக பதாகை அமைக்கும் பொருள்களை வைத்துள்ளனா். அச்சமயம் அங்கு வந்த ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலா்கள் தேவநாதன், ராம்குமாா் ஆகியோா் சாலையில் வைத்திருந்த பொருள்களை எடுக்க கூறினா். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவலா் தேவநாதனை இளைஞா்கள் இருவரும் தாக்கினா்.

இதுகுறித்து தேவநாதன் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அருண், காளிதாஸ் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.