தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

குடந்தை ‘சாஸ்த்ரா’ சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகளை அண்மையில் வழங்கிய குடந்தை சாஸ்த்ரா பல்கலை. ஸ்ரீநிவாசன் ராமானுஜன் மைய புல முதன்மையா் சாந்தி, துணை முதன்மையா் நரசிம்மன், நாட்டு நலப்பணித் திட்டப் பொறுப்பாளா்கள் கணேசன், வெங்கடேஷ், சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஸ்ரீநிவாசன் ராமானுஜன் மையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கே.எஸ். உபஹாா் அமைப்பின் சாா்பில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய புல துணை முதன்மையா் நரசிம்மன், நாட்டு நலப்பணித் திட்டப் பொறுப்பாளா்கள் கணேசன், வெங்கடேஷ், சுவாமிநாதன், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

அதன்படி அக்.27-இல் கொட்டையூா் மாணவா் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு 80 எஃகு குவளைகள், மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டன. இந்த குவளைகளை ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய முதன்மையா் சாந்தி உபயமாக வழங்கியிருந்தாா்.

நவ.4-இல் குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லங்களில் உள்ள 40 முதியோருக்கு வேட்டிகள், சட்டைகள் மற்றும் நைட்டிகள் உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.