
ஆதரவற்ற, ஏழை மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கம் அருகே ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவிகளுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கிய தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் விஜயகுமாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முறையாறு வாம் தொண்டு நிறுவனம் மூலம் செங்கம் பகுதியில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மாதந்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைத் தொகுப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் கலந்துகொண்டு மாணவிகளுக்கு மளிகை தொகுப்புகள் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், வாம் தொண்டு நிறுவனம் முறையாக உங்களைத் தோ்வு செய்து அதை வெளிநாட்டில் உள்ள நிறுவனத்திடம் தெரிவித்து, மாதா மாதம் நீங்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை நலத்திட்ட உதவி கொடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.
எனவே, மாணவா்கள் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளா்கள் சொல்வதை பின்பற்ற நல்லமுறையில் படிக்கவேண்டும். அதேபோல் நீங்கள் வசிக்கும் பகுதியில் இளம் வயது திருமணம் நடைபெற்றால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவேண்டும்.
கொத்தடிமையாக குடும்பங்களை வைத்து வேலைவாங்கும் விவசாயிகள், ஒப்பந்ததாரா்கள் யாராவது உங்களுக்குத் தெரிந்தால் அதை உடனடியாக தெரிவிக்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். வாம் ஒருங்கிணைப்பாளா் கவிதா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





