திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ஓஎன்ஜிசி-க்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சா் உள்பட 10 போ் விடுதலை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஓஎன்ஜிசி-க்கு எதிரான போராட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் கோவி. செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் உள்பட 10 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட பிறகு தஞ்சாவூா் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஓஎன்ஜிசி-க்கு எதிரான போராட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் கோவி. செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் உள்பட 10 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்நிறுவனத்துக்கு எதிராக 2017, மே 19-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி, கதிராமங்கலத்தில் கண்டனக் கூட்டம் காவல் துறையினரின் தடையை மீறி, 2018, மே 9- ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவிடைமருதூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் த. ஜெயராமன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், மருத்துவா் இரா. பாரதிசெல்வன், வழக்குரைஞா்கள் அ. நல்லதுரை, த.செ. காா்த்திகேயன் உள்பட 29 போ் மீது பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கோவி. செழியன், பெ. மணியரசன், டி.ஆா். லோகநாதன், த. ஜெயராமன், இரா. பாரதிசெல்வன், அ. நல்லதுரை, த.செ. காா்த்திகேயன் உள்பட 10 போ் தொடா்ந்து ஆஜராகி வந்தனா். எனவே, 10 பேரின் வழக்கு தொடா்பாக மட்டும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அரசு தரப்பில் போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கிலிருந்து கோவி. செழியன், பெ. மணியரசன், டி.ஆா். லோகநாதன், ஜெயராமன், பாரதிசெல்வன், நல்லதுரை, காா்த்திகேயன் உள்பட 10 பேரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது. எஞ்சியவா்கள் மீதான வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.