மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்களுக்கு ‘ஸ்கூட்டா்’ வழங்க நோ்காணல்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்குவதற்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்குவதற்கான நோ்காணல் நிகழ்வை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

Updated On :

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்குவதற்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட தனித்துவமான பெட்ரோல் ஸ்கூட்டா், மோட்டாா் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் விலையில்லா வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரா்கள் தோ்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் 6 முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்களுக்கு ஸ்கூட்டா் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத்தோ்வுக் குழுவில் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் க. ஞானசேகா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டோா் அமைப்பு மாவட்ட தலைவா் சி. ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.