பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ஒரு சக்கரம் ரூ. 1 லட்சம்

பசுமை சூழ்ந்த புல்வெளிக்கு இடையே அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் இருந்துதான் இந்திய ரயில் பெட்டிகளைச் சுமந்து செல்லும் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

Published On :

பசுமை சூழ்ந்த புல்வெளிக்கு இடையே அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் இருந்துதான் இந்திய ரயில் பெட்டிகளைச் சுமந்து செல்லும் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் நலிந்த மாநிலமான பிகாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில், கங்கை கரையோரத்தில் சரண் மாவட்டத்தில் பிலா பகுதியில் அமைந்துள்ள ரயில் பெட்டி சக்கர தொழிற்சாலை, இந்திய ரயில்வேயின் இதயமாக இருக்கிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய ரயில்களுக்குத் தேவையான சக்கரங்களில் 60 சதவீதம் பெங்களூருவில் உள்ள எலஹங்கா ஆலையில் தயாரிக்கப்பட்டன. மீதமுள்ள 40 சதவீத சக்கரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிலா ரயில் சக்கர தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 295 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ 1,639.59 கோடி மதிப்பில் பிலா ரயில் சக்கர ஆலை உருவாக்கப்பட்டது.

தற்போது பிலா ரயில் சக்கரத் தொழிற்சாலை இந்திய ரயில்வேக்குத் தேவையான சுமார் 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரையிலான சக்கரங்களைத் தயாரித்து வழங்குகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இந்த ஆலையில் இருந்து 3,26,756 சக்கரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழிற்சாலையானது அமெரிக்காவின் க்ரிஃபின் டெக்னாலஜி நிறுவனத்தின் அதிநவீன வார்ப்பு தொழில்நுட்பத்தைப் (காஸ்ட் ஸ்டீல் டெக்னாலஜி) பயன்படுத்துகிறது. இதன்படி, உருகிய எஃகு திரவத்தை கிராஃபைட் அச்சுகளின் கீழ்ப் பகுதியிலிருந்து அழுத்தத்துடன் செலுத்தி சக்கரங்கள் வார்க்கப்படுகின்றன. இது சக்கரங்களுக்கு மிகுந்த வலிமையையும், துல்லியமான வடிவத்தையும் தருகிறது.

இந்திய ரயில்வே எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடிப் பங்களிப்பும் இல்லாமல், தங்களது பொறியாளர்களுடன் எல் அன்ட் டி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உள்நாட்டிலேயே இந்த அதிநவீன ஆலையைக் கட்டமைத்தது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு சக்கரம் சுமார் 500 கிலோ எடை கொண்டது. 12.5 டன் எடையைத் தாங்கும் சக்தியுடையது. மேலும் இந்தச் சக்கரங்கள் 3 லட்சம் கி.மீ. தூரம் சுழலக்கூடிய திறன் கொண்டது. ஒரு சக்கரம் தயாரிக்க ரூ.1லட்சம் செலவிடப்படுகிறது.

பிலா ரயில் சக்கரத் தொழிற்சாலையின் தலைமை அதிகாரியும், முதன்மை தலைமைப் பொறியாளருமான ஆர்.ஆர்.பிரசாத்:

'இந்தத் தொழிற்சாலைக்கு 2008-ஆம்ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன. சக்கரங்கள் அதிக எடையையும், தொடர்ச்சியான அதிர்வுகளையும், பிரேக் பிடிக்கும்போது உருவாகும் அதிக வெப்பத்தைத் தாங்க கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நேரில் பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்ட 2013-14 -ஆம் ஆண்டு 154 சக்கரங்கள் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டன. அதன்பின்னர் முழு வேகத்தில் சக்கரங்கள் தயாரிக்கப்பட்டன. 2025 - 26-ஆம் நிதியாண்டில் 60,699 சக்கரங்களைத் தயாரித்தோம். 2026 -27 நிதியாண்டில் 72 ஆயிரம் சக்கரங்களைத் தயாரித்து வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் தற்போது வரை 18,261 சக்கரங்கள் வழங்கியுள்ளோம்.

பாதுகாப்புக் கருதி இன்னும் இந்தத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவில்லை, மனித மூளையின் ஆற்றலைப் பயன்படுத்தியே ஆலை செயல்படுகிறது. தரவு மேலாண்மையில் மட்டும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது' என்றார்.

Story image

ஆலையின் தளவாடப் பிரிவு முதன்மைத் தலைமை மேலாளர் சஞ்சீவ்குமார் ராய் கூறுகையில்...

'இந்திய ரயில்வே வாரியம் சக்கரங்கள் தயாரிக்க வழங்கும் ஆணையை அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் சக்கரங்களைத் தயாரிக்கின்றோம். கழிவு செய்யப்பட்ட இரும்பு, கார்பன், மாங்கனீசியம், சிலிக்கான், குரோமியம், நிக்கல், மாலிப்டினம், தாமிரம் உள்ளிட்ட உலோகங்களைக் கொண்டு சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் பிரதானமாக இரும்பு பயன்படுத்தப்படுகிறது. வார்ப்புத் தொழில்நுட்பத்தில் 1,700 டிகிரி வெப்ப நிலையில் சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சக்கரம் எட்டுக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நாங்கள் தயாரித்த சக்கரங்கள் இதுவரை பெரிய விபத்துகளில் சிக்கியது இல்லை. சக்கரங்கள் உடைந்ததும் இல்லை என்பது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயமாகும்.

'வந்தே பாரத்' ரயில்களுக்கும் இங்குதான் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன. சென்னை ஐ.சி.எஃப். ரயில் பெட்டி தொழிற்சாலைக்கும் இங்கிருந்து சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

முதலில் சரக்குப் பெட்டிகள், வேகன்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே சக்கரங்களைத் தயாரித்து வழங்கினோம். தற்போது பயணிகள் எலக்ட்ரிக்கல் ரயில், வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான ரயில்களுக்கும் நான்கு வகையான சக்கரங்களைத் தயாரித்துக் கொடுக்கிறோம். தொடக்கத்தில் இந்த ஆலையில் ஒரு யூனிட் மட்டுமே இருந்தது. தற்போது 8 யூனிட்டுகள் உள்ளன. சுமார் 1000 பேர் பணிபுரிகின்றனர். விவசாயம் சார்ந்த இந்த மாவட்டத்தில் இந்தத் தொழிற்சாலை மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது' என்றார் அவர்.

பிலா ரயில் சக்கர ஆலை, இந்திய ரயில்வேயின் பெட்டிகளை மட்டும் சுமக்கவில்லை. ஒரு வகையில் தொழில்வாய்ப்பே இல்லாத பிகாரை, தொழில்வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் சற்று தூக்கி நிறுத்தியுள்ளது. பாட்னா, சரண் மாவட்ட மக்களுக்கு புதிய வாய்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.