கூட்டுறவு அங்காடியில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகாா்
பாபநாசம் வட்டம், மருத்துவகுடி கிராம கூட்டுறவு அங்காடியில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அரிசி - பிரதிப் படம்
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், மருத்துவகுடி கிராம கூட்டுறவு அங்காடியில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஆதனூா் ஊராட்சி மருத்துவக்குடியில் உள்ள கிராம கூட்டுறவு அங்காடியில் கல்விகுடி, மருத்துவக்குடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இங்கு விநியோகிக்கப்படும் அத்தியாசிய பொருள்களான அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களாக இதுபோன்ற அரிசிகளை வழங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கன்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி தரமான அரிசி வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

