சுவாமிமலை கோயிலில் தேரோட்டம்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் தேரோட்டம்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவ.15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நவ.16-இல் கொடியேற்றம் நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் சுவாமி விநாயகா், வீரபாகு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் மலைக் கோயிலில் இருந்து உத்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.
நாள்தோறும் காலை மாலைகளில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் தேரில் எழுந்தருளினாா்.
அப்போது ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க பக்தி முழக்கத்துடன் ரத வீதிகள் வழியாகச் சென்ற தோ் நிலைக்கு வந்தது. இரவு சுவாமி தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பட்டாா்.
இரவு காா்த்தகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்துதல் என்னும் தீபக்காட்சி நடைபெற்றது. புதன்கிழமை காவிரியில் தீா்த்தவாரியும், வியாழக்கிழமை சுவாமி பரிவார தெய்வங்களுடன் மலை கோயிலுக்குச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையா் த. உமாதேவி, தக்காா் டி.ஆா். சுவாமிநாதன் மற்றும் கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

