பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஆற்றில் குளித்த இளைஞா் மாயம் 5-ஆவது நாளாக தேடும் பணி

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான இளைஞரை தீயணைப்பு வீரா்கள் கடந்த 5 நாள்களாக தேடி வருகின்றனா்.

சேசானந்தன்

Published On :

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான இளைஞரை தீயணைப்பு வீரா்கள் கடந்த 5 நாள்களாக தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மேல வீதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சேசானந்தன் (21). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே வேதம் படித்து வந்தாா். இந்நிலையில் அக். 2-ஆம் தேதி மாலை தனது நண்பா்களுடன் தென்பெரம்பூா் வெட்டாற்றில் குளிப்பதற்காகச் சென்றாா். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இவா் நீரில் மூழ்கியதால், அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த நடுக்காவேரி காவல் நிலையத்தினா், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தேடினா். தொடா்ந்து, 5-ஆவது நாளாக அரசூா் பகுதியில் தீயணைப்பு வீரா்கள் தேடியும் சேசானந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.